திமுகவினர் மீது நடவடிக்கை - காவல் ஆணையருக்கு அதிமுக வேட்பாளர் கடிதம்

வேட்பு மனு தாக்கல் செய்யும்போது ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாகதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடசென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராயபுரம் மனோ என்கிற இரா. மனோகர் கடந்த மார்ச் 25ஆம் தேதி திங்கட்கிழமை வடக்கு வட்டார மண்டல அலுவலகம் 5 இல் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அவருக்கு வழங்கப்பட்ட டோக்கன் எண் 7 அவர் அலுவலகத்திற்கு காலை 11:50 மணிக்கு வந்திருந்தார். மனோவுக்கு பின்னால் 12:20 மணி அளவில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் முன்பு செல்ல முயற்சி செய்ததாகவும், ஆளும் கட்சி என்பதால் தங்களுக்கு தான் முதலில் வேட்பமான தாக்கல் செய்ய அனுமதி தர வேண்டும் என்று தேர்தல் அதிகாரி முன்பு அமர்ந்து அதிமுகவினருக்கு இடம் தராமல் சுமார் 2 மணி நேரமாக வாக்குவாதம் செய்ததாகவும், அதன்பின் தேர்தல் அதிகாரி வருகை பதிவேடு மற்றும் கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவற்றோடு மற்ற அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய பின் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவுக்கு பின்பு தான் வந்தார் என்று தெரிந்த பின் அவருக்கு டோக்கன் எண் 8 என கொடுக்கப்பட்டது.

அதற்கு திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இவை அத்தனைக்கும் வீடியோ பதிவு ஆதாரம் உள்ளது வேட்பு மனு தாக்கலின் போது தேர்தல் சட்ட விதிமுறையை மீறி 5 நபர்கள் மட்டும் செல்வதற்கு பதிலாக திமுகவினர் 7 நபர்களுக்கு மேல் உள்ளே நுழைந்ததற்கும் வீடியோ ஆதாரம் உள்ளது. அமைச்சர் , சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி மேயர், டவுன் பிளானிங் சேர்மன் மற்றும் வழக்கறிஞர்கள் அவர்கள் அதிகாரத்தை துஷ்ரயோகம் செய்ததற்கும் அரசாங்க அலுவலர்களின் வேலையை செய்யவிடாமல் தடுத்ததற்கும், அதிமுகவினர் மீது தவறே இல்லாத பட்சத்தில் இரண்டு மணி நேரம் காக்க வைத்து மிரட்டியதற்கும் தகுந்த வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையருக்கு அதிமுக வட சென்னை வேட்பாளர் ஆன்லைன் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.



Tags

Next Story