சிப்காட்டில் கழிவுநீரை வெளியேற்றிய ஆலைகள் மீது நடவடிக்கை: அமைச்சர் சு.முத்துசாமி

சிப்காட்டில்  கழிவுநீரை வெளியேற்றிய ஆலைகள் மீது நடவடிக்கை: அமைச்சர் சு.முத்துசாமி

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்

சிப்காட்டில் கழிவுநீரை வெளியேற்றிய ஆலைகள் மீது நடவடிக்கை ஆய்வுக்கு பிறகு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கீழ்பவானி கால்வாயில் கான்கீரிட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளுடன் தமிழக வீட்டுவசதித்துறை மற்றும் மதுவிலக்கு , ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சு.முத்துசாமி தமிழகத்தில் மழை வெள்ளத்திற்கு பிறகு தமிழகத்தின் எல்லா நீர்நிலைகளையும் சரி செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பெருந்துறை சிப்காட் தொழிற்சாலை உரிமையாளர்கள் பொய் கூறி வருவதாகவும் , சுத்திகரிக்காமல் கழிவு நீரை வெளியேற்றிய ஆலைகள் மீது மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆய்வுக்கு பிறகே சரியான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்த அமைச்சர் முத்துசாமி, சிப்காட் தொழிற்சாலைகள் சட்டப்படி நடக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் சிப்காட் பகுதியில் செயல்படும் ஆலைகளால் 15 ஆண்டுக்காலமாக நீர் மாசுடைந்துள்ளதாகவும் அதை .சரி செய்ய கால அவகாசம் தேவை எனவும் , அதுவரை கிராம மக்களும் , நொழிற்சாலை நிர்வாகத்தினரும் அமைதி காக்க ஙேண்டும் என்றார்.

Tags

Next Story