பட்டாசு தொழிற்சாலைகளை குத்தகைக்கு விட்டால் நடவடிக்கை - எஸ்பி

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளை குத்தகை மற்றும் உள் குத்தகைக்கு விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட எஸ்பி தலைமையில் பட்டாசு உற்பத்தியாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார், உரிமத்தில் குறிப்பிட்ட பட்டாசுகளை தவிர வேறு பட்டாசுகளை உற்பத்தி செய்யக்கூடாது, ரசாயன மூலப்பொருள் விற்பனை செய்ய கூடிய நபர்கள், உரிமம் இல்லாதவர்களுக்கு ரசாயன மூலப்பொருட்களை விற்பனை செய்ய கூடாது, மீறி சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்க ரசாயன பொருட்களை விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

விதி மீறி பட்டாசு தொழிற்சாலைகளை குத்தகைக்கு மற்றும் உள் குத்ததைக்கு விடுவது போன்ற செயல்கள் வெடிப்பொருள் சட்டத்திற்கு புறம்பானது மீறும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு தொழிற்சாலையில் பயிற்சி பெற்ற பணியாளர்களை மட்டுமே பணிக்கு நியமிக்கப்பட வேண்டும். பட்டாசு தொழிற்சாலை வளாகத்தில் உள்ள மரத்தின் நிழலில் பட்டாசு தயாரித்தில் மற்றும் பட்டாசுகளை உலர்த்துதல் செய்ய கூடாது. ஒவ்வொரு பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர்களும் தங்களது பட்டாசு தொழிற்சாலையில் தங்களது கீழ் பணிபுரிய கூடிய பணியாளரின் அதிக கவனம் செலுத்தி அவர்களது உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.

Tags

Next Story