விடுதிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர்

விடுதிகளில் அதிக கட்டணம் வசூலித்தால்  நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர்

ஆலோசனை கூட்டம் 

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை - 2023 முன்னிட்டு திருவண்ணாமலை நகரில் பக்தர்கள் தங்கும் விடுதி, ஹோட்டல், லாட்ஜ் உரிமையாளர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ், தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓட்டல், லாட்ஜ்களில் தங்கும் கட்டணம் அதிக அளவில் தீபத்திருவிழாவிற்காக வசூலிக்கப்படுகிறது என்று வரப்பெற்ற புகார் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.தீபத் திருவிழாவை முன்னிட்டு சாதாரண நாட்களை விட அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவது தவிர்க்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஓட்டல்கள், லாட்ஜ்கள் சரியான கட்டண விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் பக்தர்களுக்கு நல்ல சேவை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், திருவண்ணாமலை கோட்டாட்சியர் மந்தாகினி, நகராட்சி ஆணையர் (திருவண்ணாமலை) தட்சணாமூர்த்தி, உணவு பாதுகாப்பு அலுவலர் மரு.இராமகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story