ஆலமரத்தை வெட்டி கடத்திய நபர்கள் மீது நடவடிக்கை- கோரிக்கை
வெட்டப்பட்ட ஆலமரம்
கோவில்பட்டி அருகே ஆலமரத்தை வெட்டி கடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் கிராமத்தில் உள்ள கண்மாயில் இருக்கும் ஆலமரத்தை இரவில் சில மர்ம நபர்கள் வெட்டி கட்டைகளை எடுத்துச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
Next Story