தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக வேட்பாளர் செய்த செயல்
தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக வேட்பாளர் ஆம்புலன்ஸிற்கு வழிவிட்ட சம்பவம் பொதுமக்களின் பாராட்டை பெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஜி. செல்வம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் பொலம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பின் போது திடீரென அப்பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனம் வந்ததால் உடனே பிரச்சார வாகனத்தை விட்டு இறங்கி ஆம்புலன்ஸ் செல்வதற்காக வாகன நெரிசலை சரி செய்து அனுப்பி வைத்தார். அதனால் அந்த பகுதியில் உள்ள மக்களிடையே நெகிழ்ச்சி ஏற்பட்டது.
Next Story