குடிநீரில் உப்பு நீர் கலப்பதை தடுக்க தாமிரபரணி ஆற்றில் நடவடிக்கை
மங்காடு பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரில் உப்பு நீர் கலப்பதை தடுக்க தாமிரபரணி ஆற்றில் தற்காலிக தடுப்பு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தின் நீர் ஆதாரமாக காணப்படும், தாமி ரபரணி ஆற்றில் கடல்நீர் புகுந்து ஆறு சுமார் ஒன்பது கிலோ மீட்டர் தூரம் உப்பாக மாறியுள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வினியோகம் செய்யும் குடிநீர் உப்பாக உள்ளது.
உப்புநீர் தாமிரபரணி ஆற்றில் கலப்பதை மாவட்ட நிர்வாகம் முழு மையாக தடுத்து நிறுத்தாத காரணத்தால் இதற்கு ஒரு முடிவு எட்டாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மங்காடு ஆற்றுப் பாலம் மேல் பகுதியில் உள்ள குடிநீர் திட் டங்களை பாதுகாக்கும் வகையில், உப்புநீர் கலந்த தாமிரபரணி ஆற்றுநீர் மாங்காடு ஆற்றுப் பாலத்தின் மேல் பகுதியில் செல்லாத வகையில், பாலத்தின் கீழ் கிட்டாச்சி மூலம் ஆற்று மணலுடன் சிறு கற்களை வைத்து மங்காடு ஊராட்சி தலைவர் சுகுமாரன் தலை மையில் தடுப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது.