அரசு புறம்போக்கு நிலம் மீட்பு வருவாய்த்துறையினர் நடவடிக்கை
புறம்போக்கு நிலம் மீட்பு
சங்ககிரி அருகே அரசு புறம்போக்கு நிலம் வைத்து வருவாய்த் துறையினர் நடவடிக்கை....
சேலம் மாவட்டம்,சங்ககிரி அருகே அரசிராமணி பேரூராட்சிகுட்பட்ட பிட் 1 கிராமம் பழக்காரன்காடு பகுதியில் 30சென்ட் புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்ட நிலங்களை வருவாய் துறையினர் ஜே சி பி இயந்திரம் மூலம் அகற்றி மீட்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி பேரூராட்சி பிட் 1 கிராமம் பழக்காரன்காடு பகுதியில் அரசு தரிசு புறம்போக்கு நிலத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்யப்படுவதாக வருவாய் துறையினர்க்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சங்ககிரி வட்டாட்சியர் அறிவுடைநம்பி தலைமையில் தேவூர் வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி ,கிராம நிர்வாக அலுவலர்கள் மலர்,தமிழ்முருகன், செந்தில்குமார், அருள்முருகன் உள்ளிட்ட வருவாய் துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 30சென்ட் புறம்போக்கு நிலத்தினை மீட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Next Story