நடிகை கெளதமி புகாரின் பேரில் நடவடிக்கை

நடிகை கெளதமி புகாரின் பேரில் நடவடிக்கை

நடிகை கெளதமி புகாரின் பேரில் நடவடிக்கை


தமிழ் ,தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகை கௌதமி இவர் தனக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலத்தை விற்பனை செய்து தரும்படி சிவங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் பகுதியை பூர்வீகமாக கொண்ட சொக்கலிங்க மகன் அழகப்பன் வயது (70) என்பவரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அழகப்பன் கெளதமி நிலத்தை விற்பனை செய்து அழகப்பன் அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் தன்னை மோசடி செய்து ஏமாற்றி விட்டதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை கவுதமி மோசடி புகார் அளித்தார்.

அதில் தனது சொத்துக்களை விற்பதற்கு அழகப்பனுக்கு அதிகாரம் வழங்கியதாகவும், ஆனால், அவர் இடத்தை விற்பனை செய்ததாக தனக்கு ரூ.4 கோடியே 10 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு அந்த இடத்தை ரூ. 11 கோடிக்கு விற்பனை செய்து மோசடி செய்ததாகவும் மேலும் சில இடங்கள் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.

இது சம்பந்தமாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் கோட்டையூரில் உள்ள அழகப்பன் பூர்வீக வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் ஜான் விக்டர் தலைமையில் 10க்கும் மேற்ற போலீசார் 11 மணி நேரமாக தீவிர சோதனை செய்தனர் மோசடி குறித்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக தெரிய வருகிறது மேலும் ஆவணங்களின் தன்மை குறித்து கண்டறிவதற்காக காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி தலைமையிலான வருவாய் துறையினரை அழைத்து அவர்கள் முன்னிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் தன்மை குறித்து ஆய்வு செய்து இறுதியில் மோசடி குறித்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது மேலும் நடிகை கெளதமியின் நில விற்பனை மோசடியில் ஈடுபட்ட அழகப்பனுக்கும் பாஜகவை சேர்ந்த மாநில நிர்வாகிகள் பலருக்கும் முக்கிய தொடர்பு உள்ளது குறித்த ஆவணங்கள் கைப்பற்றியாதகவும் கூறப்படுகிறது

Tags

Next Story