தேர்தல் விதி மீறல் புகார்கள் மீது நடவடிக்கை

தேர்தல் விதி மீறல் புகார்கள் மீது நடவடிக்கை

தேர்தல் விதி மீறல் புகார்கள் மீது நடவடிக்கை 

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதி மீறல் தொடர்பான புகார்கள் பெறப்படும்போது சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பறக்கும் படை குழுவினருக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் இன்று (16.03.2024) நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்ததாவது: இந்திய பாராளுமன்ற தேர்தல், 2024-க்கான தேர்தல் ஆயத்த நடவடிக்கைகள் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 54 பறக்கும் படை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பறக்கும் படையில் வட்டார வளர்ச்சி அலுவலர் / கண்காணிப்பாளர் நிலையில் பிற துறை அலுவலர்கள் தலைமையில் சிறப்பு காவல் ஆய்வாளர், இரு காவலர்கள் மற்றும் ஒரு கேமராமேன் ஆகியோர் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்காணும் குழுவினர் நியமிக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர். தேர்தல் விதி மீறல் தொடர்பான புகார்கள் பெறப்படும்போது சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று புகார் குறித்து ஆய்வு செய்து விதிமீறல் இருப்பினர் தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி நடவடிக்கை மேற்கொள்வார்கள் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்தார்.

இந்த இப்பயிற்சி வகுப்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்), வருவாய் கோட்டாட்சியர், தூத்துக்குடி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story