எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முக்கிய ரயில் நிலையங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பி.ஆர்.நடராஜன் எம்.பி
முக்கிய ரயில் நிலையங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பி.ஆர்.நடராஜன் எம்.பி
கோவை - பொள்ளாச்சி இடையிலான முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் சேவை துவக்க விழா கோவை ரயில் நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது. மத்திய இணையமைச்சர் எல்.முருகன்,கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கொடியசைத்து ரயில் சேவையை துவக்கி வைத்தனர். தொடர்ந்து விழா மேடையில் சிறப்புரை நிகழ்த்திய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில் கோவை-பொள்ளாச்சி இடையே ரயில் மீண்டும் இயக்க வேண்டும் என்பது கோவை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. கோவை பொள்ளாச்சி இடையிலான ரயில் பாதை மின்மயமாக்கப்பட்ட பின்னர் தென்காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களை இந்த வழித்தடத்தில் இயக்க வேண்டும்.சேலம் கோட்டத்தில் செம்மொழி எக்ஸ்பிரஸ் கேரேஜ்களை பயன்படுத்தி கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பொள்ளாச்சியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை மெமோ ரயில் சேவை இயக்க வாய்ப்புகள் இருக்கின்றன.இதனை மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கையாக வைத்து வருகிறார்கள். பொள்ளாச்சியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு மெமோ ரயில் சேவையை இயக்க தென்னக ரயில்வே நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்.மங்களூர் - கோயம்புத்தூர் இடையிலான ரயில் சேவை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்கப்படும் என பியூஸ் கோயல் ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்திருந்தார் அது இன்று வரை அமலாகாமல் உள்ளது.கொரோனா காலகட்டத்தில் பயணிகள் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன.இதன் காரணமாக 10 ரூபாய் இருந்த குறைந்தது பட்ச கட்டணம் 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கட்டணம் உயர்வு பெரிய அளவில் பிரச்சனை இல்லை என்றாலும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்வதில்லை கோவையில் இருந்து திருப்பூருக்கும் திருப்பூரில் இருந்து கோவைக்கும் பணி நிமித்தமாக தினமும் ஏராளமானோர் பயணித்து வருகின்றனர்.எனவே முக்கிய ரயில் நிலையங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை-பொள்ளாச்சி இடையிலான ரயில் சேவையை துவக்க முயற்சி எடுக்க ரயில்வே அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்தார்.இந்த நிகழ்வில் சேலம் கோட்டை ரயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா உதவி மேலாளர் சிவலிங்கம் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story