வட சென்னை திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை -ஜெயக்குமார்.

வட சென்னை திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை -ஜெயக்குமார்.
வடசென்னை தொகுதி வேட்பு மனு தாக்கலில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக வட சென்னை வேட்பாளரை தகுதி நீக்கம் செய்வதற்கு உண்டான வேலைகளை செய்வோம் என்றார்.

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தலைமை தேர்தல் அலுவலகத்தை தொடங்கி வைத்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். வடசென்னை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் ராயபுரம் மனோ, உடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வட சென்னை மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபு உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாராளுமன்ற தேர்தலில் மக்கள் விரோத ஜனநாயக விரோத ஆட்சிக்கு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத ஆட்சிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள் மக்கள். வடசென்னை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது ஏற்பட்ட பிரச்சனை தொடர்பான கேள்விக்கு, 7 ஆம் எண் டோக்கன் அதிமுக உடையது, 8 ஆவது டோக்கன் எண் திமுக உடையது. வேட்பு மனு தாக்கல் செய்வதையே முறை தவறி நடத்தியது.

அதிமுக சார்பில் புகார் மனு கொடுத்ததின் அடிப்படையில் தான் மாவட்ட தேர்தல் அதிகாரி அதனை விசாரிக்க தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள், தேர்தல் அதிகாரி அழைக்காமலேயே உள்ளே நுழைந்தது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டனர். திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்வதற்கு உண்டான எல்லா வேலையும் செய்வோம். வட சென்னை மட்டுமல்ல திமுக வேட்பாளர்கள் எந்த தொகுதியில் வாக்கு சேகரிக்க செல்ல முடியாது. வட சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் கலாநிதி 5 ஆண்டுகளில் யாரையும் பார்க்கவில்லை. சர்வாதிகார ஆட்சிக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும். ஆள்மாறாட்டம் செய்து டோக்கன் பெறுவது, வேட்பு மனு தாக்கலை திமுக அரசு முறை தவறி நடத்தியது . மாநில அரசு தேர்தல் ஆணையத்துக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. கள்ள கூட்டணி திமுக , பாஜக தான் தூத்துக்குடியில் சாதாரண வேட்பாளரை நிறுத்தியது பாஜக. கன்னியாகுமரியில் தம்பி வெற்றிப்பெறவே தமிழிசை தென் சென்னை தொகுதியில் நிறுத்தப்பட்டார். நாட்டுக்கு ஒன்றும் செய்யாத அரசு பாஜக அரசு. மக்களிடம் பிளவு ஏற்படுத்தி அதன் மூலம் ஆதாயம் தேடும் கட்சி பாஜக. ஏழே ஏழு ஜென்மம் எடுத்தாலும் இரட்டை இலையை ஒடுக்க முடியாது. சென்னை முழுவதும் திமுக வேட்பாளர்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Tags

Next Story