புதுப்பாளையத்தில் மீன்களை கொண்டு கொசு புழுக்களை ஒழிப்பு நடவடிக்கை

புதுப்பாளையத்தில் மீன்களை கொண்டு கொசு புழுக்களை ஒழிப்பு நடவடிக்கை

கொசுப்புழுக்களை ஒழிப்பு நடவடிக்கை 

சங்கரன்டாம்பாளையம் அருகே புதுப்பாளையத்தில்  மீன்களை கொண்டு கொசு புழுக்களை ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த சங்கரன்டாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட புதுப்பாளையம் கிராமத்தில் கொசு புழு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இந்நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் நாகராஜ் தலைமை தாங்கினார்‌.

இந்த நடவடிக்கையில் கம்போசியா மீன்களை கொண்டு கொசு புழுக்களை கட்டுப்படுத்தும் வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. வீடுகள், கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள்,

கவனிப்பாரற்று கிடக்கும் குடியிருப்புகளில் உள்ள நீர் தொட்டிகள் ஆகியவற்றில் உண்டாகும் கொசு‌ப் புழுக்களை இந்த கம்போசியா மீன்களை தொட்டிக்குள் வளர்ப்பதால் கொசு புழுக்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.

இந்த மீன்களின் 90 சதவீத உணவு கொசு புழுக்களை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. எனவே இது போன்ற கொசு புழுக்களை உற்பத்தி கட்டுப்படுத்தபடுகிறது. மேலும் பொதுமக்கள் இது போன்ற கொசு தொல்லையால் டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

கொசு புழுக்கள் உற்பத்தியை கட்டுபடுத்தவும், டெங்கு காய்ச்சலில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ளவும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ளவும் இது போன்ற கொசு புழுக்கள் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும்,

மேலும் காய்ச்சல் பாதிப்பு கண்டவுடன் மருத்துவரை அணுகி அதற்கான மருந்துகள் உட்கொள்ளும்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.

Tags

Next Story