தூத்துக்குடியில் லாரி மூலம் மழைநீரை அகற்ற நடவடிக்கை: சிபிஎம் கோரிக்கை

தூத்துக்குடியில் லாரி மூலம் மழைநீரை அகற்ற நடவடிக்கை: சிபிஎம் கோரிக்கை

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்

தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் அகற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடியில் பெய்த கோடை மழையால் எட்டையபுரம் ரோடு ஹவுஸிங் போர்டு, தாளமுத்து நகர் மெயின் ரோடு உட்பட பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி 17வது வார்டுக்கு உட்பட்ட ராஜீவ் நகர் 9வது தெரு பிள்ளையார் கோயில் அருகில் மற்றும் ராஜீவ் நகர் 6வது தெரு,

முருகன் ஸ்டோர் அருகிலும் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். லாரி மூலம் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் எம்.எஸ். முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story