கும்பகோணத்தில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டம்
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவை திரட்டும் வகையில்,
கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு, தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழர் தேசம் கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகம் ஆகிய கட்சிகளின் மாநில,மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வேட்பாளர் ம. க ஸ்டாலின் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அனைத்து நிலை பொறுப்பாளர்களும் பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து அனைத்து கட்சி தலைவர்களும் மாங்கனியை கையில் ஏந்தி வாக்குகளை சேகரித்தனர். இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் பொறுப்பாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.