நடிகர் அஜித் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

திருப்பூரில் ரசிகர் மன்றம் சார்பில் நடிகர் அஜித் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

உழைப்பாளர் தினம் மே 1ம் தேதி தமிழகத்தில் தலை சிறந்த நடிகரும் கோடிக்கணக்கான இதயங்களில் குடியிருக்கும் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத் தலைவர் வாத்தியார் ரமேஷ் தலைமையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உணவு , பிஸ்கட் , பழங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைமை அமைப்பாளர்கள் ரவீந்திரன் , சசிந்திர பிரபு , கோவிந்தன் , சிறப்பு அழைப்பாளர்கள் ஜி.கே கார்ஸ் இளங்கோ , சுகுமார் , மற்றும் இளைஞர் அணி நண்பர்கள் கலந்து கொண்டனர் , அதனைத் தொடர்ந்து கொங்கு மெயின் ரோடு பில்லா குரூப்ஸ் அஜித் ரசிகர் மன்றம் சார்பாக தலைவர் கணேஷ் , செயலாளர் முருகன் , துணைத் தலைவர் முருகன் , பொருளாளர் தங்கதுரை ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது.மேலும் சேவூரில் மோர்பந்தல் செங்கப்பள்ளி மகிழ்ச்சி கருணை இல்லத்தில் முதியவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது.

Tags

Next Story