சேலத்தில் நடிகர் பாவா லக்ஷ்மன் திமுகவை ஆதரித்து பிரச்சாரம்
சேலத்தில் நகைச்சுவை நடிகர் பாவா லக்ஷ்மன் திமுகவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சேலத்தில் நகைச்சுவை நடிகர் பாவா லக்ஷ்மன் திமுகவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் இறுதி கட்டப் பிரச்சாரத்தை தொடங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவு கேட்டு பிரபல நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன் சேலம் கடைவீதியில் சாலையோர கடைக்காரர்களிடமும் பொதுமக்களிடமும் மாயி திரைப்படத்தின் வசனத்தை கூறி வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தார். மேலும் நகைச்சுவை நடிகர் தர்பூசணி பழ கடையில் பழங்களை வெட்டி அனைவருக்கும் வழங்கி வாக்கு சேகரித்தார்.
Next Story