தமிழ் மொழியை அழிக்க மோடி திட்டம் - நடிகர் சந்திரசேகர் பிரச்சாரம்
வாக்கு சேகரிப்பு
நாகர்கோவிலில் நடிகர் சந்திரசேகர் பிரச்சாரம் .
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்து நாகர்கோவில் செட்டிகுளத்தில் நடந்த பிரச்சாரத்தில் நடிகரும் முன்னாள் எம்எல்ஏ வுமாக வாகை சந்திரசேகர் நேற்று இரவு பேசியதாவது:- இந்த தேர்தலில் வழக்கம் போல வரும் தேர்தலாக எண்ணி விடக் கூடாது. தமிழகத்தில் ஒருபோதும் பாரதிய ஜனதாவால் வர முடியாது. இந்தியா கூட்டணி ஒரு சிறந்த கூட்டணி. தமிழகத்துக்கு வரும் போதெல்லாம் பிரதமர் மோடி அருமையாக பேசுவார். ஆனால் அவருக்கு தமிழ் மொழியும் கலாச்சாரம் பிடிக்காது. அதனை அழிக்க வேண்டும் என்பது அவர்கள் திட்டம். பாரதியாரை பிடிக்கும் என்று கூறி தமிழக கலாச்சாரத்தை அழிக்க மோடி சதித் திட்டம் திட்டுகிறார். நாட்டின் பண்பாட்டை பாரதிய ஜனதா குழி தோண்டி புதைத்து விடும். நாட்டின் கலாச்சாரம் பாதுகாக்க பாரதிய ஜனதா ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Next Story