நலத்திட்ட உதவி வழங்கிய நடிகர் கோபி காந்தி

நலத்திட்ட உதவி வழங்கிய நடிகர் கோபி காந்தி

நாமக்கல்லில் இயக்குனர், நடிகருமான கோபி காந்தி புத்தாண்டு விழாவில், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல்லில் இயக்குனர், நடிகருமான கோபி காந்தி புத்தாண்டு விழாவில், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மையம் சார்பில் 2024 புத்தாண்டு விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. முன்னதாக நாமக்கல்லில் நடைபெற்ற 2024 புத்தாண்டு விழா துவக்கத்தில் பங்கேற்ற சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட நடிகர் கோபி காந்தி 2024 இனிப்பு லட்டுகள் மற்றும் 2024 இனிப்பு சாக்லேட்டுகளும் பொது மக்களுக்கு வழங்கி 2024 புத்தாண்டை வரவேற்றார்.

விழாவில் கோபி காந்தி பேசியதாவது உலகில் பணம் என்ற செயற்கைக்காக, ஒப்பற்ற ஜீவராசியான ஆறறிவு படைத்த மனிதன் பாசம், இரக்கம், உறவு, நட்பு, விலை மதிப்பற்ற இயற்கை வளங்களையும் இழந்து ஐந்தறிவு மிருகத்தை போல் தவிக்கிறான். மனிதன் சொகுசாக வாழ்வதாக நினைத்து இயற்கை வளங்களை பகைத்து கொண்டிருக்கிறான். ஆனால் இயற்கை தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினால், என்ன விலை கொடுத்தாலும் பேரழிவை தடுக்க முடியாது இதை கருத்தில் கொண்டு உலகம் முழுவதும் செயல்படும் அரசாங்கங்கள் செயற்கையானவற்றை தவிர்த்து இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். உலகம் முழுவதும் ஒவ்வொரு மனிதனும் இயற்கையை பாதுகாக்க தன்னை நாட்டின் தலைவராக, பிரதமராக, அமைச்சராக, காவல் அதிகாரியாக நினைத்து பாதுகாக்க வேண்டும். கடந்த பதினாறு வருடங்களாக பணத்திற்கு ஆசைப்படாமல் என்னுடன் பயணிக்கும் சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய அணைத்து நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் பாதம் தொட்டு வணங்கி, உலகம் முழுவதும் அனைவரின் உடல் நலம், அமைதி, நட்பு, மனிதாபிமானம் பெருகி வாழ்வும் சிறக்க சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர், கதாசிரியர், இயக்குனர், நடிகர் கோபி காந்தி உலக மக்கள் அனைவருக்கும் 2024 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Tags

Next Story