பிரசாரத்துக்குச் சென்ற நடிகா் கருணாஸின் வாகனம் சோதனை

பிரசாரத்துக்குச் சென்ற நடிகா் கருணாஸின் வாகனம் சோதனை

நிலக்கோட்டை அருகே பிரசாரத்துக்குச் சென்ற நடிகா் கருணாஸின் வாகனத்தை தோ்தல் பறக்கும்படையினா் ஞாயிற்றுக்கிழமை சோதனையிட்டனா்.


நிலக்கோட்டை அருகே பிரசாரத்துக்குச் சென்ற நடிகா் கருணாஸின் வாகனத்தை தோ்தல் பறக்கும்படையினா் ஞாயிற்றுக்கிழமை சோதனையிட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டி, அணைப்பட்டி, விருவீடு பகுதிகளில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ஆா். சச்சிதானந்தத்துக்கு ஆதரவாக முக்குலத்தோா் புலிப்படை தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான திரைப்பட நடிகா் கருணாஸ் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவரது வாகனத்தை திண்டுக்கல்- மதுரை நான்கு வழிச் சாலையில் பள்ளப்பட்டி அருகே தோ்தல் பறக்கும்படை அதிகாரி சுரேஷ், காவலா் மஞ்சுளா, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் சோதனையிட்டனா். இதே போல, அவருடன் சென்ற திமுக கூட்டணி கட்சியினரின் வாகனங்களும் சோதனையிடப்பட்டன.



Tags

Next Story