ஓசூரில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பேட்டி !
நடிகர் மாஸ்டர் மகேந்திரன்
விஜய், அஜித், ரஜினி. கமல் ஆகியோர் தப்பான திரைப்படங்களை எடுக்க மாட்டார்கள், அவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது : ஓசூரில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பேட்டி
விஜய், அஜித், ரஜினி. கமல் ஆகியோர் தப்பான திரைப்படங்களை எடுக்க மாட்டார்கள், அவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது : ஓசூரில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பேட்டி தமிழகம் முழுவதும் மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வெளியான அமிகோ கேரேஜ் திரைப்படம் 60 திரையரங்குகளில் கடந்த 15 ஆம் தேதி வெளியானது. ஓசூரில் இந்த படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டருக்கு நடிகர் மாஸ்டர் மகேந்திரன் மற்றும் அந்த படத்தில் நடித்த ஜி எம் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் வருகை தந்தனர். அவர்களுக்கு ரசிகர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் தியேட்டரில் அமர்ந்து சிறிது நேரம் படத்தை பார்த்தனர். அதன் பின்னர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர். படத்தின் கதாநாயகன் மாஸ்டர் மகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அடுத்ததாக கரா என்ற படத்தில் கதாநாயகனாகவும், பிரபு தேவா இயக்கத்தில் முசாசி என்ற படத்தில் வில்லனாகவும், மாணவன் என்ற படத்தில் வில்லனாகவும் கதிர் ஹீரோவாகவும் மேலும் நீலகண்டன் என்ற படத்திலும் நடித்து வருவதாக கூறினார். ஆன்லைனில் திரைப்படங்கள் வெளியாவது குறித்த கேள்விக்கு, பதில் அளித்த அவர், கஷ்டப்பட்டு எடுக்கும் திரைப்படங்கள் ஆன்லைனில் வெளியாவதை நிறுத்தவே முடியாது. பிரசவத்தின்போது 9 மாதத்தில் குழந்தை வெளியே வந்து விடும், ஆனால் திரைப்படங்களை வெளியிடுவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. ஓ டி டி மற்றும் ஆன்லைனில் திரைப்படங்களை பார்ப்பதை நாம் எதுவும் செய்ய முடியாது. ஆடியன்ஸ் தான் திரைப்படங்களை பார்க்க தியேட்டருக்கு வர வேண்டும், குடும்பத்திற்காக படம் எடுத்தால் கண்டிப்பாக வீட்டில் உள்ள மனைவி, சகோதரிகள், குழந்தைகள் ஓ டி டி யில் படம் பார்க்க மாட்டார்கள், அவர்களுக்கான படத்தை கொடுத்தால் அவர்கள் தியேட்டருக்கு வருவார்கள், ஃபேமிலி எமோஷன்ஸ் பாதிக்காத படங்களை எடுத்தால் பொதுமக்கள் திரைப்படங்களை பார்க்க 100% தியேட்டருக்கு வருவார்கள், அந்த நம்பிக்கை தான் விஜய் அஜித் ரஜினி கமல் ஆகியோர் மீது மக்களுக்கு உள்ளது. அவர்கள் தப்பான படங்களை எடுக்க மாட்டார்கள் ஒரு நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது. அதுதான் முக்கியமான விஷயம் அதை நாம் படிப்படியாக பண்ண வேண்டும் என தெரிவித்தார். பேட்டி : 1. மாஸ்டர் மகேந்திரன் - நடிகர் 2. ஜி எம் சுந்தர் - நடிகர்,
Next Story