ஜெயலலிதா இல்லத்தில் சசிகலாவை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்

போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் இன்று மாலை நடிகர் ரஜினிகாந்த் சசிகலாவை சந்தித்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் வேதா இல்லத்திற்கு எதிர்ப்புறம் புதிதாக சமீபத்தில் கட்டப்பட்ட ஜெயலலிதா இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு வி கே சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சசிகலாவின் குடும்பத்தினர் திவாகரன் உள்ளிட்டோரும் பங்கு எடுத்துக் கொண்டனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி ஜெயலலிதா இல்லத்தில் தன்னை சந்திக்க வந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் அவர்களுக்கு உணவளித்தார் வி கே சசிகலா. இந்த நிலையில், மாலையில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயலலிதா இல்லத்தில் சசிகலாவை நேரில் சந்தித்து கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேசி விட்டு வந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், இந்த வீடு கோயில் போல உள்ளது. சசிகலாவுக்கு பெயர், புகழ் மற்றும் நிம்மதியை இந்த வீடு வழங்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என்றார்.

Tags

Next Story