நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்: சிறப்பு அன்னதானம்

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்: சிறப்பு  அன்னதானம்

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர் மன்றம் சார்பில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தது. 

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர் மன்றம் சார்பில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தது.

நடிகர் ரஜினிகாந்த் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் சேலம் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மகளிர் அணி தனலட்சுமி தலைமையில் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் கோட்டை பெரியமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் 73 பெண்களுக்கு சுமங்கலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதேபோல் சுப்ரமணி நகரில் உள்ள முருகன் கோவிலில் மாவட்ட செயலாளர் முன்னிலையில் அசோக் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கினார்.

சேலம் புதிய நிலையம் பின்புறம் மாவட்ட அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து சூரமங்கலத்தில் பனமரத்துப்பட்டி செயலாளர் தலைமையில் மாவட்ட செயலாளர் முன்னிலையில் அசோக்குமார் அன்பு இல்லம் மற்றும் மாரியம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கினர். செவ்வாய்ப்பேட்டை பார்வையற்றோர் பள்ளியில் துளசிராமன் தலைமையில் மாவட்ட செயலாளர் முன்னிலையில் மாது மதிய உணவு வழங்கினார்.

Tags

Next Story