தென்காசியில் நடிகர் ராமராஜன் ரசிகர்களுடன் செல்ஃபி

தென்காசியில் நடிகர் ராமராஜன் ரசிகர்களுடன் செல்ஃபி

செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ராமராஜன்

தென்காசியில் நடிகர் ராமராஜன் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து கொண்டார்.

நடிகர் ராமராஜன் பல ஆண்டுகளுக்கு பிறகு நடித்த சாமானியன் திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ஓடி வருகிறது. ஆலங்குளம் டி. பி. வி. மல்டிபிளக்ஸ் தியேட்டரில் இத்திரைப்படம் ஓடி வருகிறது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ராமராஜன் நேற்று ஆலங்குளம் வருகை தந்தார். ரசிகர்கள் மத்தியில் வந்திருந்து ,

படம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டார். ஏராளமான ஆண்களும், பெண்களும் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். ரசிகர்கள் அவருக்கு ஆளுயர ரோஜா பூ மாலை அணிவித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டனர். மேலும் இப்படத்தின் 25வது நாளை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் மத்தியில் நடிகர் ராமராஜன் கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் அதிகமாக இருப்பதால் ஏழை, எளிய சாமானிய மக்கள் படம் பார்க்க தியேட்டருக்கு வருகை தர இயலாமல் போய் விடுகிறது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கு களிலும், அதன் உரிமையாளர் கள் முதல் 3 முன் வரிசையில் மட்டுமாவது கட்டணத்தை குறைத்தால் தியேட்டருக்கு வருகை தரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஆலங்குளம் டி. பி. வி. மல்டி பிளக்ஸ் தியேட்டரில் நாளை (இன்று ) முதல் எனது சாமானியன் படத்திற்கு ரூ. 50 கட்டணமாக வசூலிக்கப்படும் என உரிமையாளர் கூறியுள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story