சேத்துரையில் நடிகர் சமுத்திரக்கனி கோவில் திருவிழாவில் பங்கேற்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரை பூர்வீகமாக கொண்ட இயக்குனர் சமுத்திரக்கனி, 5 வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வருகை தந்தார். அங்குள்ள மாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் பூக்குழி திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் பக்தர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கி வரும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிறைவில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பாதிக்கும் ஒருவர் அதை விடுத்து மக்கள் பணி செய்ய உள்ளேன் என்ற அறிவிப்பு மிகவும் பிடித்துள்ளது. நான் பலரைக் கடந்து வந்துள்ளேன் யாரும் இதுபோன்ற முடிவு எடுத்ததில்லை. இதுவரை அரசியலுக்கு வந்த நடிகர்கள் சினிமாவை கையில் வைத்துக் கொண்டுதான் அரசியல் சேவை செய்தனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் எடுத்தது மிகவும் தைரியமான முடிவு. அவரது அடுத்தடுத்த செயல்பாடுகளை வைத்து தான் அவரது முடிவு தெரியவரும். கண்டிப்பாக அவரது கனவு நினைவாக வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் நல்லவர்களை தேர்வு செய்து மக்கள் வாக்களிக்க வேண்டும். யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும். இதற்கும் மேலாக பிரபஞ்ச சக்தி யார் வெற்றி பெற வேண்டும் என்பதை முடிவெடுக்கும். ஆறு முனை போட்டியாக இருந்தாலும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. யார் வெற்றி பெற்றாலும் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும், பதற்றம் இன்றி இருக்க வேண்டும், நிம்மதியாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.