சத்திரப்பட்டியில் நடிகர் சரத்குமார், ராதிகா பிரச்சாரம்

சத்திரப்பட்டியில் நடிகர் சரத்குமார், ராதிகா பிரச்சாரம்

தேர்தல் பிரச்சாரம் 

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் பாஜக வேட்பாளர் ராதிகா மற்றும் அவரது கணவர் நடிகர் சரத்குமார் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியின் நடிகை சரத்குமார் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இன்று அவர் விருதுநகர் மாவட்டம் தாமரை சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். வேட்பாளருடன் அவரது கணவர் நடிகர் சரத்குமாரும் பரப்புரையில் ஈடுபட்டார்.

வேட்பாளர் ராதிகா பேசும் போது, இந்தியா பெரிய வட்டம் என்றால், மிக சிறிய வட்டம் விருதுநகர் தொகுதி. சிறிய வட்டத்தில் இருந்து பெரிய வட்டத்திற்கு செல்ல சுமூகமான பாதை வேண்டும். மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும் என உறுதி பட தெரிய வந்துள்ளது. ஆனால் திமுகவினர் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவ்வாறு இருந்தால் வரும் காலத்தில் நலத்திட்ட உதவிகளை எவ்வாறு கேட்க முடியும். என்னை நீங்கள் தேர்வு செய்தால் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு சுமூகமான பாதை உருவாகும். தற்போதைய வாக்காளர்கள் முன்பை போல் இல்லை. வாக்களித்த உரிமையில் நலத்திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்புகின்றனர். ஜிஎஸ்டி குறித்தும் கேள்வி எழுப்புகின்றனர். என்றார்.

பின்னர் சரத்குமார் பேசும் போது, முக்கியமான கால கட்டத்தில் இந்த தேர்தலை சந்தித்து வருகிறோம். இந்தியா முன்னேறி வருகிறது. மற்ற நாடுகள் இந்தியாவை பார்த்து பொறாமை கொண்டுள்ளது. மோடி சக்தி வாய்ந்த மனிதராக உள்ளார். இஸ்ரேல் ரஷ்யா போரை நிறுத்தக் கூடிய சக்தி படைத்தவர். கட்சத்தீவை மீட்கும் சக்தி படைத்தவர். காங்கிரஸ் ஆட்சியை விட அதிகமா தமிழகத்திற்கு வழங்கி உள்ளார். குலசேகர பட்டினத்தில் அருகில் அமர்ந்து கொண்டிருந்த ஸ்டாலினுக்கு, மோடி என்ன செய்தார் என தெரியவில்லை. தூத்துக்குடி துறைமுகத்தை விரிவு படுத்துவதற்காக வந்த போதும் ஸ்டாலின் உடன் இருக்கிறார். ஸ்டாலின் மத்திய அரசிடம் இருந்து அதிக நிதி கேட்கிறார். ஆனால் இது வரை வாங்கிய பணத்திற்கு முறையான கணக்கு ஒப்படைக்காததால், கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதில்லை. அதிகமாக இளைஞர்கள் உள்ள நாடு இந்தியா. அவர்களை முறையாக வழி நடத்தக் கூடிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. பொருளாதார அடிப்படையிலும், வாழ்வாதார அடிப்படையிலும் முன்னேற மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும்.என்றார்.

Tags

Next Story