திமுகவிற்கு வாக்களித்தால் நாம் பாவிகளாகி விடுவோம் - நடிகர் சிங்கமுத்து
தேர்தல் பிரசாரம்
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சேலம் மாவட்டம் ஆத்தூரில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குமரகுருவிற்கு ஆதரவாக திரைப்பட நடிகர் சிங்கமுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது திமுகவில் வாரிசு அரசியல் இருப்பதாகவும், நான் 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் அரச மரத்தை சுற்றி வந்ததாகவும், ஆனால் திமுகவினருக்கு குழந்தைகளாய் பிறப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உதயநிதியை முதலமைச்சராகிவிட்டு வட மாநிலத்திற்கு சென்று எதையாவது சொல்லி பிரதமராகி விடலாம் என எண்ணுகிறார். 60 சப்பாத்தியை அதிகாலையில் 5 மணிக்கு எழுந்து சாப்பிடுபவர்கள் வடமாநிலத்தவர்கள் அவர்களை ஏமாற்ற முடியாது.
முன்னாள் அமைச்சர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆசியோடு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் நம்பளையும் காப்பாற்றி இருக்கிறார். இன்னொன்று வந்துள்ளது பலாப்பழத்தை உருட்டிவிட்டு அதில் இரண்டு கொட்டையை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.முதலமைச்சரின் மருமகன் சபரீசன் எல்லா பகுதிகளிலும் சென்று ஆயிரம் ஏக்கர் நிலம் வாங்குவது அதற்கு முதலமைச்சர் தோல் தொழிற்சாலை வருகிறது என கொட்டகை அமைத்து அந்த இடத்தை பொதுமக்கள் அதிக விலை கிடைப்பதாக நம்பிய பின் கொட்டகையை பிரித்து விட்டு செல்வதுதான் வாடிக்கை.தமிழகத்தை பாதை மாநிலமாக மாற்றி உள்ளனர். மேலும் தமிழ்நாடு முன்னேறாமல் போவதற்கு திமுகவுக்கு வாக்களித்தால் நாம் பாவிகள் ஆகி விடுவோம் என தெரிவித்தார்.