அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் சிங்கமுத்து பிரசாரம்
நாமக்கல் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஹா சு. தமிழ்மணியை ஆதரித்து இராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இந்திரா நகர், விஜயலட்சுமி தியேட்டர் பகுதி, நகர வங்கி தெரு, வி.நகர், கருப்பனார் கோவில் வீதி, அருந்ததியர் தெரு, எல் ஐ சி பகுதி உள்ளிட்ட பகுதிகளில் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து திறந்த வாகனத்தில் அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய போது : அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே இப்பொழுது நாம் ஏன் கூடியிருக்கிறோம் என்று சொன்னால் தெரிந்தோ தெரியாமலோ கடந்த தேர்தலில் நாம் ஏமார்ந்து விட்டோம். பொய்யான வாக்குறுதிகளை நம்பி நாம் நம்முடைய நாக்கில் தேனை தடவி ஏமாற்றி விட்டார்கள். அதைத் தருகிறேன் இதைத் தருகிறேன் என்று கூறினார்கள். நம்ம தலையை மொட்டை அடித்துவிட்டு சென்றுவிட்டார்கள். இன்றைய 520 வாக்குறுதிகளில் மக்கள் உரிமைத் தொகை மகளிர் உரிமைத்தொகை என்றெல்லாம் கூறினார் மாதம் ஆயிரம் ரூபாய் என்றால் பாதி பேருக்கு தரவில்லை. கேட்டால் தகுதியான பெண்களுக்கு மட்டும் தான். என்ன தகுதி வேண்டும் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன தகுதி என்றே தெரியவில்லை. வயது 45 இருக்க வேண்டுமா அல்லது வேறு என்ன இருக்க வேண்டும் என்று தெரியவில்லை.
தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து பெண்களும் அன்பானவர்கள், பன்பானவர்கள் பகுத்தறிவானவர்கள் தானே எல்லோருமே அறிவாளிகள் தான். அது என்ன ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி இருக்கிறது மற்றொரு தகுதி இல்லை என்று கூறுவதற்கு நீ யார். நீ கொடுத்தால் அனைவருக்கும் கொடு இல்லாவிட்டால் கொடுக்காமல் விட்டுவிடு அது என்ன தகுதி பார்ப்பதற்கு .. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நமக்கு என்ன குறை வைத்தார்கள். இலவச அரிசி தரவில்லையா, தாலிக்கு தங்கம் தரவில்லையா, இலவச மிக்ஸி கிரைண்டர் தரவில்லையா, இலவச ஸ்கூட்டி தரவில்லையா, மடிக்கணினி தரவில்லையா ஆடு மாடு தரவில்லையா அம்மா உணவகம் கூட கொடுத்தார்கள். அப்படிப்பட்ட புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி அம்மாவை இழந்து நாம் தவிக்கிறோம். இந்த நேரத்தில் 520 வாக்குகளை கொடுத்து ஏமாற்றி விட்டார்கள்.
திமுக ஆட்சியில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது பள்ளி குழந்தைகளை கல்லூரி செல்லும் மாணவ மாணவர்களையும் எப்படி காப்பாற்றுவது. ஆங்காங்கே கல்லூரி மாணவிகளும் மது அருந்துகிறார்கள். அங்கே டாஸ்மாக் சென்றால் 20 கிழவிகள் படுத்திருக்கிறார்கள். நாட்டை நாசமாக்கி விட்டார்கள் திமுகவினர். புரட்சித்தலைவி அம்மாவின் காலத்தில் இரண்டு மணி நேரம் குடித்து கொள்ளலாம் என்று இருந்தது. இப்பொழுது பார்த்தால் ராத்திரி பகல் என்று 24 மணி நேரமும் மது கிடைக்கும் அளவிற்கு இருக்கிறது. ஒவ்வொருவரின் பாக்கெட்டிலும் குவாட்டர் இருக்கிறது ஒவ்வொருவரிடமும் கஞ்சா இருக்கிறது. தமிழக மக்களை போதைகளாக்கி அவர்களை அப்படியே மயக்கத்தில் வைத்திருந்தால் நம்முடைய குடும்பம் நன்றாக வளரும் என்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். உதயநிதியை முதல்வராகி விட்டு நாம் டெல்லி சென்று பிரதமர் ஆகிவிடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார் ஸ்டாலின் அவர்கள்.
ஸ்டாலின் அவர்களே முதலில் தமிழ்நாட்டை காப்பாற்ற பாருங்கள். இவர்களுக்கு பிள்ளைகள் அதிகம் கருணாநிதி அவருக்கு பின்னால் ஸ்டாலின் அவருக்கு பின்னால் உதயநிதி அவருக்கு பின்னால் இன்பநிதி இப்படியே சென்றால் 234 தொகுதிகளிலும் அவர்கள் குடும்பத்தையே நிக்க வைப்பார்கள். நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். பாலைவனமாக மாற்றுவதற்கு நாம திமுகவிற்கு ஓட்டு போட வேண்டுமா இல்ல பசுமை பூங்காவாக அல்லது அமைதி பூங்காவாக இருப்பதற்கு எடப்பாடி யார் தலைமையில் அதிமுகவிற்கு இருக்கின்ற கூட்டணிக்கு ஓட்டு போட வேண்டுமா என்று முடிவு செய்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரியும் இரட்டை இலைக்கு தான் ஓட்டு போட வேண்டும் என்று ஆனால் ஞாபகம் படுத்துகிறோம். இந்நிகழ்வில் இராசிபுரம் அஇஅதிமுக நகரச் செயலாளர் எம். பாலசுப்பிரமணியம் மற்றும் முன்னாள் வார்டு கவுன்சிலர்கள் , வார்டு கழக செயலாளர், நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.