மறைந்த விஜயகாந்த் குடும்பத்தினரை சந்தித்து நடிகர் சூரி ஆறுதல்.
விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினரை சந்தித்து நடிகர் சூரி ஆறுதல்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் நடிகர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி பின் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்று விஜயகாந்த் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து விட்டு செல்கின்றனர். அந்த வகையில் இன்று நடிகர் சூரி கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, பின் சாலிகிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று விஜயகாந்த் அவர்களின் மனைவியும் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து சென்றார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூரி நான் படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் விஜயகாந்த் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. அவர் சினிமாவில் எப்படி ஒரு நல்ல மனிதராக இருந்தாரோ அதே போல நிஜ வாழ்கையில் வாழ்ந்து விட்டு சென்றுவிட்டார். மேடையில் பேசியது போல " என்னடா காசு பணம்" அதே போல் தான் வாழ்ந்துவிட்டு சென்றுள்ளார். நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் பெயர் வைப்பது குறித்த கேள்விக்கு எல்லோரும் கலந்து பேசி கண்டிப்பாக விஜயகாந்த் அவர்களுக்கு சேர வேண்டிய மரியாதையை செய்வோம்.
Next Story