கொமதேக வேட்பாளரை ஆதரித்து நடிகர் வாகை சந்திரசேகர் பிரசாரம்

கொமதேக வேட்பாளரை ஆதரித்து  நடிகர் வாகை சந்திரசேகர் பிரசாரம்

தேர்தல் பிரசாரம் 

எருமப்பட்டி, புதுச்சத்திரம் ஒன்றியத்தில் கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து ராஜேஸ்குமார் எம்.பி, நடிகர் வாகை சந்திரசேகர் ஆகியோர் வாக்கு சேகரித்தனா்.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளா் வி.எஸ்.மாதேஸ்வரன் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். அதன்படி எருமப்பட்டி, புதுச்சத்திரம் உள்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

இந்த வாக்கு சேகரிப்பில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என் இராஜேஸ்குமார், நடிகர் வாகை சந்திரசேகர் ஆகியோர் அங்குள்ள மக்களிடம் திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை தொடா்பான துண்டுப் பிரசுரங்களை வழங்கியும், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்தும், தற்போது காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள பல்வேறு தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்தும் வாக்கு சேகரித்து, திமுக நிா்வாகிகள் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு ஆதரவு கோரினா்.

இதில் எருமப்பட்டி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம் புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் கௌதம், தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

Tags

Next Story