நடிகர் விஜய்க்கு எப்போதும் எங்களின் ஆசி உண்டு: எஸ்.ஏ.சந்திரசேகர்

சாமி தரிசனம் எஸ்.ஏ சந்திரசேகர்
கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் சக்தி பீடங்களில் ஒன்றான ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர் .
இந்நிலையில் பிரபல நடிகரும், தமிழக வெற்றிக் கழக நிறுவனருமான விஜய் அவர்களின் தந்தை திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் தாயார் பாடகி ஷோபா ஆகியோர் இன்று காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டனர்.
மூலவர் சன்னதியில் 10 நிமிடங்கள் சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் பிரார்த்தனைகளை மேற்கொண்ட பின் அவருக்கு திருக்கோயில் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டது. சிறப்பு பிரார்த்தனை குறித்து கேட்டபோது, திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்ள வந்துள்ளதாகவும் , விஜய்க்கு எப்போதும் எங்களது ஆசி உண்டு எனவும் , திருக்கோயிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்ள வந்து உள்ளதாகவும் , கேள்விகளை தவிர்க்குமாறு தெரிவித்தார்.
விரைவில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடைபெற உள்ள தேதி அறிவிக்கப்பட உடல் நிலையில் திரைப்பட நடிகரின் தந்தை மற்றும் தாய் இருவரும் காஞ்சிபுரம் கோயிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டதும் , நீண்ட காலத்திற்குப் பிறகு அன்னையர் தினத்தில் விஜய் தனது தாய் மற்றும் தந்தையரை சந்தித்து நினைவு பரிசுகள் வழங்கியது என தொடர்ச்சியாக செயல்கள் நடைபெற்று வருகிறது.
