நடிகர் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

நடிகர் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள்

குமாரபாளையத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை டெல்லியில் பதிவு செய்ததினை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் அதனை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் விஜய் ரசிகர்கள் பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர், ஓலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மேலும் பல்வேறு கோஷங்களை எழுப்பியும் மகிழ்ந்தனர்.

மேலும் இன்றைய நாள் எங்களுக்கு பொங்கல் மற்றும் தீபாவளி போன்று சிறப்பானதொரு பண்டிகை போன்ற நாள் எனவும் நடிகர் விஜய் தமிழகத்திற்கு இன்னொரு எம்.ஜி.ஆர் என கூறி பொதுமக்களிடம் எடுத்துரைப்போம் எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags

Next Story