நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாம்: டிடிவி தினகரன்

நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாம்: டிடிவி தினகரன்
டி.டி.வி தினகரன்
நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது என்பது ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் மக்கள்-தான் ஏற்றுகொள்ள வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தூத்துக்குடியில் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில மகளிர் அணி துணை செயலாளர் சண்முக குமாரி இல்ல திருமண நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து உரிய நேரத்தில் தெரிவிப்போம் என்றார் மேலும் திமுக அரசின் 3-ஆண்டுகால ஆட்சி மக்களை ஏமாற்றுக்கூடிய செயல்பாடாகதான் இருக்கின்றது அதைபோல் கழுதை தேய்ந்து கட்டெரும்பை ஆன கதைபோல் இருக்கிறது என்றார். அதிமுகவில் இருக்ககூடிய ஸ்லிப்பர் செல்கள் உரிய நேரத்தில் வெளியே வருவார்கள் என்ற அவர் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது என்பது ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் மக்கள்-தான் ஏற்றுகொள்ள வேண்டும் என்றார் மேலும் பாரதிய ஜனதா கட்சியை வைத்து எல்லா பலனையும் எடப்பாடி அனுபவித்துவிட்டு தேர்தல் நேரத்தில் பாஜகவிற்கு துரோகம் செய்து வருகின்றார் அவருக்கு துரோகம் செய்வது என்பது அவருக்கு இயற்கையான சுபாகம்-தான் ஏற்கனவே அவரை முதல்வராக்கியவர்களுக்கு துரோகம் செய்தார் இப்பொழுது அதிமுக ஆட்சியை காப்பாற்றி கொடுத்த பாஜக-விற்கு துரோகம் செய்கின்றார் என்று அம்மா மக்கள் முனேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story