நடிகர் விமல் கணக்கம்பட்டியில் தரிசனம்

நடிகர் விமல் கணக்கம்பட்டியில்  தரிசனம்
தரிசனம் 
பழனி கணக்கம்பட்டி பழனிசாமி சித்தர் கோயிலில் நடிகர் விமல் சாமி தரிசனம் செய்தார்.
பழனி கோயிலில் நடிகர் விமல் சாமி தரிசனம் செய்தார். ரோப்கார் மூலம் கோயிலுக்கு சென்ற அவர் அங்கு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார். பின்பு பழனி கணக்கம்பட்டி கோயிலில் நடிகர் விமல் சற்குரு சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: கணக்கன்பட்டி சாமி கோயில் தரிசனம் செய்வது மனதுக்கு இனிமையாகவும் சாந்தமாகவும் உள்ளது. பல அற்புதங்கள் நிகழ்த்திய சுவாமி நித்தியடைந்த இந்த இடத்தில் தரிசனம் செய்யும் போது எனக்கு ஒரு உந்து சக்தி கிடைக்கிறது. எல்லா மக்களும் நலம் பெற்று வாழ வேண்டும் என்பது நோக்கம் ,என்றார். அவருக்கு கோயில் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story