அப்துல் கலாம் புகைப்படத்தை கொண்டு நடிகர் விவேக் ஓவியம் வரைந்த ஆசிரியர்

அப்துல் கலாம் புகைப்படத்தை கொண்டு நடிகர் விவேக் ஓவியம் வரைந்த ஆசிரியர்

ஓவியத்துடன் ஆசிரியர் செல்வம் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் நடிகர் விவேக் பிறந்தநாளை முன்னிட்டு பிரஷ், பென்சில் ஏதும் பயன்படுத்தாமல் அப்துல் கலாம் போட்டோவை கொண்டு விவேக் உருவத்தை வரைந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது,நாம் அனைவரும் அறிவோம் " நடிகர் விவேக்" டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் நேர்மையான சீடர், அப்துல் கலாம் மீது அதிக அன்பு கொண்டவர் நடிகர் விவேக். அப்துல் கலாமுடன் பலமுறை உரையாடி இருக்கிறார். அப்துல்கலாம் தன் குடும்பத்தினரிடம் விவேக் பற்றி பேசியுள்ளார். அப்துல் கலாம் சொன்ன வார்த்தையை மறக்காமல், வருங்கால சந்ததியினருக்கு உதவும் வகையில் கலாம் கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார் விவேக். சுமார் 33 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்ட நிலையில் விவேக் அவர்கள் திடீரென்று இறப்பு நமக்கு மிகப்பெரிய இழப்பு, நடிகர் விவேக் பிறந்தநாள் முன்னிட்டு அவருடைய கனவான ஒரு கோடி மரக்கன்றுகள் நடுதல் நிறைவேற்றும் வகையில், "அப்துல் கலாமின் சிஷ்யன் விவேக்" என்ற வாசகம் எழுதி பிரஷ், பென்சில் ஏதும் பயன்படுத்தாமல் "அப்துல் கலாம் போட்டோவாலேயே" அப்துல் கலாமின் சிஷ்யன் விவேக்கின் உருவத்தை போட்டோவின் கார்னரில் நீர் வண்ணத்தை தொட்டு எட்டு நிமிடங்களில் விவேக்கின் ஓவியத்தை வரைந்தேன். என்றார்.

Tags

Next Story