செம்பு முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் விடிவி கணேஷ்

செம்பு முருகன் கோவிலில் சாமி தரிசனம்  செய்த நடிகர் விடிவி கணேஷ்

சாமி தரிசனம் செய்த கணேஷ்

காமெடி நடிகரும் தயாரிப்பாளருமான VTV கணேஷ் பாதாள செம்பு முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பாதாள செம்பு முருகன் கோவிலில் நகைச்சுவை நடிகரும் தயாரிப்பாளரும் பாதாள செம்பு முருகன் பக்தருமான VTV கணேஷ் இன்று திண்டுக்கல் இராமலிங்கம்பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோவிலுக்கு வருகை புரிந்தார் .

கோவிலின் முன்பகுதியில் அமைந்துள்ள காவல் தெய்வமான சங்கிலி கருப்பு சாமியினை தரிசனம் செய்தார். பின்னர் பேரழகனான பாதாள செம்பு முருகனை தரிசனம் செய்து கருங்காலி மாலை வாங்கி அணிந்து கொண்டார்.

பாதாள செம்பு முருகன் கோவில் நிர்வாகம் சார்பாக நடிகர் VTV கணேஷ்க்கு மாலை அணிவித்து சிறப்பு மரியாதை அளிக்கபட்டது . பின்பு அங்கு கூடியிருந்த பக்தர்களிடம் பாதாள செம்பு முருகன் சக்தி குறித்து கேட்டறிந்தார்.

Tags

Read MoreRead Less
Next Story