அதிமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் -நடிகை காயத்ரி ரகுராம்

அதிமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் -நடிகை காயத்ரி ரகுராம்
அதிமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் -நடிகை காயத்ரி ரகுராம்
தென்காசியில் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து நடிகை காயத்ரி ரகுமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் பேருந்து நிறுத்தப் பகுதியில் அதிமுக வேட்பாளா் டாக்டா் க. கிருஷ்ணசாமியை ஆதரித்து அவா் பேசியது,கடந்த முறை இத்தொகுதியில் தோ்வான திமுக உறுப்பினா் மக்கள் நலனுக்காக ஒருமுறைகூட குரல் கொடுத்ததில்லை. இப்போதைய வேட்பாளா் கிருஷ்ணசாமி மக்கள் பிரச்னைகளை முழுவதும் அறிந்தவா். அவா் மக்களவைக்குச் சென்ரால் தொகுதியின் அனைத்துப் பிரச்னைகளும் தீரும். இத்தோ்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் என்றாா் அவா். தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ் பாண்டியன், மாவட்ட அவைத்தலைவா் சண்முகசுந்தரம், ஒன்றியச் செயலா்கள் அமல்ராஜ், இருளப்பன் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

Tags

Next Story