திமுக மகளிர் அணி மற்றும் தொண்டரணி சார்பாக  நடிகை குஷ்பூவின் பேச்சுக்கு கண்டன ஆர்பாட்டம்

திமுக மகளிர் அணி மற்றும் தொண்டரணி சார்பாக  நடிகை குஷ்பூவின் பேச்சுக்கு கண்டன ஆர்பாட்டம்

ஆர்பாட்டம்

எடப்பாடி பேருந்து நிலையத்தில் நடிகை குஷ்பு படத்தை செருப்பு மற்றும் துடப்பத்தால் அடித்து கண்டன கோஷம்
எடப்பாடி பேருந்து நிலையத்தில் திமுக மகளிர் அணி மற்றும் தொண்டரணி சார்பாக நடிகை குஷ்பூவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவரது உருவப்படத்தின் மீது செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. திமுக அரசு வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை பிச்சை என இழிவு படுத்தி பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பூவை கண்டித்து திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பாக சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் மேற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரம்யா, மேற்கு மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் நிர்மலா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அப்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வழங்கிவரும் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாயை பிச்சை என இழிவு படுத்தி பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்புவிற்கு கண்டனம் தெரிவித்து அவரது உருவப் படத்தின் மீது துடப்பம் மற்றும் செருப்பால் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் எடப்பாடி பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது

Tags

Next Story