அடைக்காக்குழி ஊராட்சி மன்ற கூட்டத்தை 9 உறுப்பினர்கள் புறக்கணிப்பு

அடைக்காக்குழி ஊராட்சி மன்ற கூட்டத்தை 9 உறுப்பினர்கள் புறக்கணிப்பு
கூட்டத்தை புறக்கணித்த உறுப்பினர்கள்
அடைக்காக்குழி ஊராட்சி மன்ற கூட்டத்தை 9 உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

குமரி மாவட்டம் கிள்ளியூர் ஒன்றியம் அடைக்காக்குழி ஊராட்சியில் அட்டக்குளம் ஒன்று உள்ளது. சுமார் 4 மாதங்களுக்கு முன் 100நாள் வேலை திட்டத்தில் ரூ 8 லட்சம் செலவில் குளத்தை ஆழப்படுத்தி தூர்வாரும் பணி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ரூ 6 லட்சம் செலவில் படித்துறை, பக்கச்சுவர் கட்டும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு வேலை நடைபெற்றது. கட்டுமானப்பணிக்கு அஸ்திவாரம் தோண்டிய மண்ணை வெளியேற்றாமல் குளத்தில் போட்டுவிட்டு ஒப்பந்தக்காரர் சென்றுவிட்டார்.

மண்ணை குளத்தினின்று அகற்றக்கேட்ட ஆதிதிராவிட சமூகத்தை சார்ந்த செல்வகுமார் என்ற விவசாயி மீது ஊராட்சித்தலைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து தனக்கு இருக்கும்அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி காவல்நிலையத்தில் போராட்டம் நடத்தி பொய்வழக்கு பதிவு செய்தார்.

இந்நிலையில் அடைக்காக்குழி ஊராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 9 ஊராட்சி உறுப்பினர்கள் கூட்டாக வழங்கிய குளத்தில் மண் அகற்றுவது தொடர்பான விஷயம் கூட்டப்பொருளில் சேர்க்கப்படவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த ஊராட்சியின் 9 உறுப்பினர்கள் ஆமோஸ், கெப்சிமேரி, பிறேமா, சாந்தி, ஷிபு, ரமேஷ், வினீஷ்குமார், சித்ரலேகா, துணைத்தலைவர் லெனின் ஆகியோர் ஊராட்சித்தலைவியிடம் புறக்கணிப்பு கடிதம் கொடுத்து விட்டு கூட்டத்தை புறக்கணிப்பு செய்து வெளியேறினர்.

Tags

Next Story