ராமநாதபுரம் சுற்றுலா வாகனங்களுக்கு அடாவடி வசூல்
ஏர்வாடி தர்காவில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பு மாவட்ட ஆட்சியர் உத்தரவு வட்டாட்சியர் பழனிக்குமார் அதிரடி ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு என்னும் மத நல்லிணக்க திருவிழாவை முன்னிட்டு மே 10ஆம் தேதி முதல் ஜூன் 8ஆம் தேதி வரை யாத்திரைகள் வரும் வாகனங்களுக்கு ஆட்டோ, பைக் 30 ரூபாயும் கார், சுமோ போன்றவைகளுக்கு 80 ரூபாயும் சுற்றுலா பேருந்து மற்றும் சரக்கு வாகனத்திற்கு 100 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டு ஏர்வாடி ஊராட்சியின் மூலம் ஏல குத்தகை விடப்பட்டது இதில் 10 லட்சத்து 40 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்த குத்தகைக்காரர் விதிகளை மீறி ஏர்வாடி ஊராட்சி நிர்வாத்தின் பெயரில் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதாகவும் 100 ரூபாய் ரசீதுக்கு பதிலாக ரூ150 ரசீது அடித்து வசூலித்து வந்து உள்ளார். மேலும் ஏர்வாடி தர்காவிற்கு வரும் யாத்திரைகளை மரியாதை குறைவாக பேசுவதாகவும் அடாவடித்தனமாக வசூல் செய்வதாகும் வந்த புகாரியின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் இரவு நேரத்தில் திடீர் ஆய்வை மேற்கொண்டார். மேலும் ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாக்கு வருகை புரிந்த வாகனங்கள் நிற்கும் இடத்திற்கு சென்று கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறதா என்று கேட்டறிந்து அவர்களிடம் வாகன வசூல் ரசீதையும் பார்வையிட்டார். அப்பொழுது வேன் டிரைவர் கூறுகையில் அதிகமான கட்டணம் வசூல் செய்வதாகவும் நாங்கள் கேட்கும் பணத்தை தரவில்லை என்றால் நீ ஏன் வருகிறாய் திரும்பி செல் என்று கூறியதாகவும் அடாவடித்தனமாக வசூல் செய்வதாகவும் தெரிவித்தார் மேலும் ஏர்வாடி ஊராட்சி பெயரில் ரூ150 அச்சடிக்கப்பட்ட ரசீதை கீழக்கரை வட்டாட்சியரிடம் காட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து யாத்திரிகளிடமும் வாகன ஓட்டுனர்களிடமும் விசாரித்து புகார்களை கேட்டறிந்தார் அதன் அடிப்படையில் குத்தகைக்காரர் மீதும் அடாவடி வசூல் செய்தவர்கள் மீதும் ஏர்வாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யுமாறு கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின்போது துணை வட்டாட்சியர் பரமசிவம் மற்றும் வருவாய்த் துறையினர் காவல் துறையினர் உடன் இருந்தனர்.
Next Story