அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்; மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி பெரியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட இணைப்புக் கல்லூரிகளில் நான் முதல்வன் திட்ட முனைப்புக்கல்லூரியாக செயல்படுவதால் இக்கல்லூரியில் "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளிலிருந்து 3583 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அனைத்து கல்லூரிகளிலும் நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தங்களது மாணவ, மாணவிகளை இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையச்செய்தனர்.

இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் மா.கோவிந்தராசு தலைமையில் முகாம் நடைபெற்றது. நான் முதல்வன் திட்ட வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் லெ. ஜோதி அவர்கள் முன்னிலையில், இக்கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் அனைவரும் இணைந்து செயலாற்றினர். கல்லூரியின் கணிதத்துறைத்தலைவர் பேராசிரியை வி. எமீமாள்நவஜோதி, தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக்கழக நான் முதல்வன் திட்டத்தின் நிகழ்ச்சி மேலாளர்கள் கிரண்குமார். கிரண் பிரகாஷ் சிறப்புரை ஆற்றினார்கள். முகாமில் சென்னை, கோயம்புத்தூர், பம்பாய், பொள்ளாச்சி, ஈரோடு, திருச்சி போன்ற பெரு நகரங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் வேலைவாய்ப்பினை நல்கினர்.

இம்முகாமில் 1021 க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு மாணவ. மாணவிகளை தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவர்களுக்கு பணிநியமன ஆணையும் வழங்கப்பட்டது. அனைத்து கல்லூரி மாணவ. மாணவிகளும் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags

Next Story