விருதுநகர் அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு சிகிச்சை பிரிவு

விருதுநகர் அரசு மருத்துவமனையில்“குடி மற்றும் போதை மறுவாழ்வு சிகிச்சை” பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மனநல மருத்துவத்துவத்தின் மூலம் “குடி மற்றும் போதை மறுவாழ்வு” சிகிச்சை பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். மனநல மருத்துவத்துறையின் கீழ் ஏற்கனவே பத்து படுக்கைள் கொண்ட உள் நோயாளிகள் பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது .

நமது மாவட்டத்தில் குடி மற்றும் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி கவனம் செலுத்தி சிகிச்சை வழங்கிட, ஐந்து படுக்கைகள் கொண்ட இந்த சிறப்பு உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு தொடங்கப்படுகிறது. இந்த பிரிவினில் குடி மற்றும் போதைப் பழக்கத்தினால் ஏற்படும் உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சையும் சிறப்பான உளவியல் சிகிச்சையும் அளித்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போதைப் பழக்கத்தினால் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கு தகுந்த குடும்பநல ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.

போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டு வருவதால், அவர்களின் வாழ்வின் தரம் உயர்த்தப்படுவதோடு ,குடும்பத்தின் பொருளாதார நிலையும் மேம்படும். எனவே மாவட்ட ஆட்சியரின் தனிகவனத்தால் ஏற்படுத்தப்பட்ட இந்த சிறப்பு சிகிச்சைப் பிரிவை பயன்படுத்தி போதைப் பழக்கத்தில் இருந்து விடுபடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.சீதாலட்சுமி, துணை முதல்வர் மரு. அனிதா மோகன், மருத்துவமனைக் கண்காணிப்பாளர் மரு.அருண், மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story