சேலம் அல்லிகுட்டையில் அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்கள்

சேலம் அல்லிகுட்டையில் அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்கள்
X

சேலம் அல்லி குட்டையில் ரூ.35 லட்சம் செலவில் அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்கள்

சேலம் அல்லி குட்டையில் ரூ.35 லட்சம் செலவில் அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்கள்
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 9-வது கோட்டத்தில் மாநகராட்சி கல்வி நிதியின் கீழ் ரூ.34.80 லட்சம் மதிப்பீட்டில் அல்லிக்குட்டை நடுநிலைப்பள்ளியில் 2புதிய கூடுதல் கட்டிடம் மற்றும் கழிப்பறை கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை சேலம் வடக்கு தொகுதி ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் மேயர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் அம்மாபேட்டை மண்டலகுழு தலைவர் தனசேகர், பகுதி செயலாளர் ராஜா, மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம், கோட்ட செயலாளர் லோகமுத்து உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல சேலம் மாநகராட்சி 37-வது வார்டு அம்மாபேட்டை காமராஜர் காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்ட கழிவறையை மேயர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். இதில் மண்டல தலைவர் தனசேகர், கவுன்சிலர்கள் திருஞானம், பச்சியம்மாள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story