காங்கேயம் பேருந்து நிலையத்தில் கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூல்

காங்கேயம் பேருந்து நிலையத்தில்  கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூல்

பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை

காங்கேயம் பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் கழிப்பறை சோதனையிட‌ பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் காங்கயம் பேருந்து நிலையத்தினுள் இயங்கி வரும் பேருந்து நிலைய கழிப்பிடத்தை அதிகாரிகள் சோதனையிட‌ வேண்டும் என பேருந்து நிலையம் வரும் பயணிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காங்கேயம் பகுதியில் இயங்கி வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் செல்ல இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளது. காங்கயத்தை சுற்றியுள்ள முக்கிய நகரங்களான தாராபுரம், ஈரோடு, பெருந்துறை, சென்னிமலை,

பல்லடம், கரூர்‌ ஆகிய பகுதிகளை சேர்ந்த பல லட்சம் பயணிகள் வந்து செல்லும் முக்கிய பேருந்து நிலையங்களாக விளங்குகிறது. மேலும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தேவைக்காக சுமார் 250க்கும் மேற்பட்ட நகராட்சி கடைகளும் இயங்கி வருகின்றன. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் பயணிகள் பயன்பாட்டிற்காக கட்டண கழிப்பிடங்கள் செயல்படுகிறது. இந்த நிலையில் கழிப்பிடத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த பலகை அகற்றப்பட்டுள்ளது.‌ எனவே பொதுமக்கள் மற்றும் பயணிகள் உண்மையான கழிப்பிட கட்டணத்தை அறிய‌ முடியவில்லை எனவும், மேலும் சிலர் கட்டணத்தை தாண்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த கழிப்பிடத்தை உடனடியாக ஆய்வு செய்து முறையாக செயல்படுகிறாதா? வசூலிக்கப்படும் கட்டணம் ஆகியவற்றை சோதனை செய்ய வேண்டும் எனவும் பேருந்து நிலைய கடைக்காரர்கள், பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story