மேட்டூரில் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா ஆய்வு

மேட்டூரில்  கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா ஆய்வு

ஆய்வு செய்த கூடுதல் தலைமை செயலாளர் 

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா ஆய்வு செய்தார்.

மேட்டூர் அணையில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மேட்டூர் அணையில் கீழ் மட்ட மதகு, மேல்மட்டமதகு ,அணையின் மேல் பகுதி வலது கரையிலிருந்து இடது கரை வரை நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மற்றும் 16 கண் மதகுபாலம் புனரமைக்கும் பணி குறித்தும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சுப்ரமணி, பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் சிவகுமார், உதவி செய்ய பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனாவிடம் பத்திரிக்கையாளர்களிடம் கூறும் போது டெல்டா பாசனத்திற்கு கடந்த மூன்றாம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று மாலைக்குள் டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் சென்று சேரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நாளை மாலை 6 மணியுடன் பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்படும்.

அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் டெல்டா பகுதிக்கு சென்றுள்ளதா என்பது குறித்து திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடைமடை பகுதி வரை பார்வையிட போவதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story