கூடுதல் வகுப்பறை கட்டிடம்
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டிசாவடி ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். இவர்களுக்கு போதுமான வகுப்பறை கட்டிடம் இல்லை என பள்ளி ஆசிரியர்கள், அப்பகுதி பொதுமக்கள் அருள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவர் தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்காக ரூ.24 லட்சம் ஒதுக்கீடு செய்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டு தற்போது நிறைவுற்று உள்ளது.
இதையடுத்து கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை அருள் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில வன்னியர் சங்க செயலாளருமான கார்த்தி , மாவட்ட கல்வி அதிகாரி கபீர், பள்ளி தலைமை ஆசிரியர் சுஜாதா, செட்டிச்சாவடி ஊராட்சி துணை தலைவர் பரிமளா கோவிந்தராஜ், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் செட்டிசாவடி ஏழுமலை, செட்டிசாவடி தலைவர் அம்பிகா கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட தொழிற்சங்க தலைவர் மாங்கனிபாலு, பகுதி செயலாளர். திருசங்கு, மாவட்ட துணை செயலாளர் மு.அருள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.