வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு
வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு
திட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ருதன் ஜெய்நாராயணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மேல்மலையனூர் ஒன்றியம் கடலி ஊராட்சியில் ரூ.4 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி, ரூ.42 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கிராம செயலகம் கட் டும் பணி மற்றும் 100 நாள் வேலை திட்ட பணிகளையும் கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார். இதேபோல், வளத்தி ஊராட்சியில் உள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15-வது மாநில நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.54 லட் சத்து 75 ஆயிரம் மதிப்பில் கூடுதல் மருத்துவமனை வளாகம் கட்டும் பணி, ரூ.11 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் புதிய அங்கன் வாடி மையம் கட்டும் பணி, தாயனூரில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளையும் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ருதன் ஜெய்நாராயணன் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது மேல் மலையனூர் வட்டார கல்வி குழு தலைவர் நெடுஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலோத்துங்கன், சரவணகுமார், வட் டார மருத்துவ அலுவலர் டாக்டர் வெங்கடேசன், டாக்டர் முகேஷ், ஒன்றிய பொறியாளர்கள் நாராயணமூர்த்தி, தண்டபாணி, ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி ஜெயக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Next Story