பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு கூடுதல் நிவாரணம்

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு கூடுதல் நிவாரணம்
நிவாரணம் வழங்கல்
விருதுநகர் மாவட்டம் ராமுதேவன் பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 4தொழிலாளர்களுக்கு மேலும் 10 லட்சம் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ராமு தேவன் பட்டியில் விக்னேஷ் என்பவருக்கு சொந்த மான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில்150க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலும் ஒரு தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும் 2 தொழிலாளர்கள் படுகாயத்துடன் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்து உயிரிழந்த தொழிலாளர் களுக்கு மத்திய மாநில அரசுகள் நிவாரணங்களை அறிவித்திருந்தது. அதே போல் பட்டாசு ஆலை உரிமையாளர் தரப்பில் வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர் களின் குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய்க்கான காசோலையும் 50, ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பட்டாசு வெடி விபத்து குறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ் மற்றும் ஆலை போர்மேன் சுரேஷ் குமார் மற்றும் ஆலையின் மேலாளர் ஜெயபால் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பட்டாசு ஆலை போர்மேன் சுரேஷ்குமார் மற்றும் ஜெயபால் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலை உரிமையாளரை ஆலங்குளம் போலீசார் தேடி வந்த நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ் முன் ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ் தாக்கல் செய்து இருந்த முன் ஜாமின் மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு மேலும் 10 லட்சம் ரூபாய் மற்றும் காயமடைந்த இரண்டு தொழிலாளர் களுக்கு தலா 2 லட்ச ரூபாய் என நிவாரணம் வழங்க பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார்

இதனை அடுத்து வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் ஆலங்குளம் காவல் ஆய்வாளர் ஆகியோர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு நேரில் வரவழைத்து வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தல 10 லட்சமும் காயம் அடைந்த இரண்டு தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் உள்பட 1 கோடியே 4 லட்சம் ரூபாய்க்கான வரைவு காசோலைகளை வழங்கினர் மேலும் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு கூடுதல் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

Tags

Next Story