பழனி முருகன் கோவிலில் தைப்பூச விழாவிற்கு கூடுதல் வசதி
கோப்பு படம்
பழனி முருகன் கோவிலில் தைப்பூச விழாவிற்கு கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூச விழாவில் பக்தர்களுக்கான நவீன கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கட்டணமில்லா வெந்நீர் குளியல், தங்கும் வளாகம், கண்காணிப்பு கேமராக்கள், மருத்துவகுழுக்கள் வசதிகள் கூடுதலாக செய்யப்பட உள்ளதாக கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக 11 இடங்களில் நிரந்தர காவடி மண்டபங்கள் கட்டப்பட்டு குடிநீர், மின் , கட்டணமில்லா கழிப்பறை வசதிகள் செய்யப்பட உள்ளன.
ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப் பட உள்ளது. பக்தர்களுக்கான தண்ணீர், கூடுதல் பஸ் வசதி செய்ய பட வேண்டிய முன்னேற்பாடுகளை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும் என்றார்.
Next Story