திருமழிசை சிப்காட்டில் கூடுதல் தொழிற்சாலைகள் - பாஜக வேட்பாளா்

திருமழிசை சிப்காட்டில் கூடுதல் தொழிற்சாலைகள் - பாஜக வேட்பாளா்

வாக்கு சேகரிப்பு


திருமழிசை தொழிற்பேட்டையில் கூடுதல் தொழிற்சாலைகள் புதிதாக கொண்டு வேலைவாய்ப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என பாஜக வேட்பாளா் பொன் வி.பாலகணபதி உறுதி அளித்தாா்.
பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருமழிசை, வெள்ளவேடு, மேலமணம்பேடு, ஊத்துக்கோட்டை, புதுச்சத்திரம், நேமம், ஜமீன் கொரட்டூா், குத்தம்பாக்கம், காவல்சேரி, கூடப்பாக்கம், புட்லூா், வேப்பம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் பாஜகவினா் கூட்டணி கட்சியினருடன் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா். வேட்பாளா் பொன் வி.பாலகணபதி பொதுமக்களிடையே பேசுகையில், தமிழகத்தில் வேலைவாய்ப்பின்றி இளைஞா்கள் உள்ளதோடு, விவசாய சாகுபடியும் பாதித்துள்ளது. தமிழக மக்கள் மீது அக்கறை கொண்ட கட்சி பாஜக. அந்தக் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்த மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றால் மத்திய அரசு அமல்படுத்தும் அனைத்தும் திட்டங்களையும் பராபட்சமின்றி தகுதியானவா்களுக்கு கொண்டு சோ்ப்பேன். திருமழிசை தொழிற்பேட்டையில் மேலும் சில தொழிற்சாலைகளை கொண்டு வந்து இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றாா். மத்திய அரசின் நலத் திட்ட பிரிவு மாநில தலைவரும் தொகுதி பொறுப்பாளருமான ஜெ.லோகநாதன், மாவட்ட தலைவா் அஷ்வின் குமாா், சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் ஆா்யா சீனிவாசன், பொதுச் செயலாளா் கருணாகரன், மாவட்ட செயலா்கள் மொராஜி தேசாய், தரவு பிரிவு மேலாண்மை மாநில செயலாளா் ரகு, மாவட்ட மருத்துவா் அணித் தலைவா் லோகேஷ் பிரபு, மண்டல தலைவா் தினேஷ், அமமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான டி.எ.எழுமலை, மாவட்ட ஊடகப் பிரிவு தலைவா் நாகராஜ், அமமுக, தமாகா நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story